இரண்டாம் நிலை காவலர் பணி: உடற்தகுதி தேர்வு தேதி அறிவிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 24, 2021

இரண்டாம் நிலை காவலர் பணி: உடற்தகுதி தேர்வு தேதி அறிவிப்பு

இரண்டாம் நிலை காவலர் பணி: உடற்தகுதி தேர்வு தேதி அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் தமிழக காவல்துறையில் 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்ற தேர்வாளர்களுக்கு 26.07.21 முதல் உடற்தகுதி தேர்வு நடைபெறும் என்றும் மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்கான ஹால் டிக்கெட்டுகள் https://www.tnusrbonline.org இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கபட்டுட்டள்ளது.

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் தங்களது அனுமதி சீட்டை வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து, அனுமதி சீட்டில் கூறப்பட்டுள்ள அனைத்து அசல் ஆவணங்களையும் உடன் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக பல மாவட்டங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளதன் படி, தேர்வுக்கு வரும் நபர்கள் செல்போன் மற்றும் வேறு எலக்ட்ரானிக் (மின்னணு) உபகரணங்களை உடன் எடுத்து வர அனுமதியில்லை.

ஒவ்வொரு தேர்வரும் இரட்டை முகக்கவசம் அணிந்தும், கிருமி நாசினியுடனும் தான் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை உடற்தகுதி தேர்வன்று மறக்காமல் எடுத்து வரவேண்டும்.


No comments:

Post a Comment

Post Top Ad