புதிதாக உருவாகும் நகராட்சிகள் இவைதானா? தள்ளிப் போகுமா உள்ளாட்சித் தேர்தல்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 23, 2021

புதிதாக உருவாகும் நகராட்சிகள் இவைதானா? தள்ளிப் போகுமா உள்ளாட்சித் தேர்தல்?

புதிதாக உருவாகும் நகராட்சிகள் இவைதானா? தள்ளிப் போகுமா உள்ளாட்சித் தேர்தல்?


தேர்தல் சமயத்தில் அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெட்ரோல் விலை குறைப்பு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ 1000 போன்ற சில வாக்குறுதிகளை நிதி நிலைமை சரியான பின்னர் நிறைவேற்றுவோம் என்று கூறிவருகிறது. அந்த வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்படும் என்ற எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக எத்தனை மாநகராடசிகள், நகராட்சிகள் உருவாக்கப்படும் என்பதை முதல்வர் ஸ்டாலின் தான் அறிவிப்பார் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாவட்டங்களைப் பிரித்த அதிமுக!

கடந்த அதிமுக ஆட்சியில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்கள் இரண்டாக, மூன்றாக பிரிக்கப்பட்டன. தற்போது திமுக ஆட்சியில் மாநகராட்சிகள் புதிதாக உருவாக உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் மொத்தம் 148 நகராட்சிகள் உள்ளன. ஒரு

பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட அந்த பேரூராட்சியில் 30 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை இருக்க வேண்டும். தற்போது 33 பேரூராட்சிகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகையை கொண்டிருப்பதால் அவை நகராட்சிகளாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புதிய நகராட்சிகள் பட்டியல்?

காஞ்சிபுரம் மாவட்டம் - குன்றத்தூர், மாங்காடு,

செங்கல்பட்டு மாவட்டம் - திருக்கழுக்குன்றம், கூடுவாஞ்சேரி, திருநீர்மலை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர்.

திருவள்ளூர் மாவட்டம் - பொன்னேரி



கடலூர் மாவட்டம் - வடலூர்

விழுப்புரம் மாவட்டம் - கோட்டக்குப்பம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூர்.

ராணிப்பேட்டை மாவட்டம் - சோழிங்கர்

சேலம் மாவட்டம் - சங்ககிரி, தாரமங்கலம், இடங்கனசாலை

கரூர் மாவட்டம் - பள்ளப்பட்டி

ஈரோடு மாவட்டம் - பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம்

திருப்பூர் மாவட்டம் - திருமுருகன்பூண்டி, அவினாசி

கோவை மாவட்டம் - கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை

நீலகிரி மாவட்டம் - கோத்தகிரி

தஞ்சை மாவட்டம் - அதிராமபட்டினம்

தேனி மாவட்டம் - உத்தமபாளையம்

சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை

தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர்


நெல்லை மாவட்டம் - களக்காடு, பணகுடி, வடக்கு வள்ளியூர்

கன்னியாகுமரி மாவட்டம் - கொள்ளங்கோடு

ஆகிய 33 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா?

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போது புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், அந்த மாவட்டங்களுக்கு அப்போது தேர்தல் நடைபெறவில்லை. விடுபட்ட பகுதிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. பேரூராட்சி,

நகராட்சி, மாநகராட்சிகளுக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்பட்டால், புதிய மாநகாராட்சிகள் உருவாக்கப்பட்டால் உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிப்போகுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad