வைகோ மகனுக்கு கட்சியில் முக்கிய பதவி? இனி கட்சியை வழிநடத்துவது இவர்தானா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

வைகோ மகனுக்கு கட்சியில் முக்கிய பதவி? இனி கட்சியை வழிநடத்துவது இவர்தானா?

வைகோ மகனுக்கு கட்சியில் முக்கிய பதவி? இனி கட்சியை வழிநடத்துவது இவர்தானா?

மதிமுக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் மதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்பிருந்தே வைகோ சார்பாக கட்சியினர் வீட்டு விசேஷங்கள், நிகழ்ச்சிகளில் அவரது மகன் துரை வையாபுரி கலந்து கொண்டுவந்தார். கோவில்பட்டி அல்லது சாத்தூர் தொகுதியில் துரை வையாபுரி போட்டியிட வாய்ப்புள்ளதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் தேர்தலில் அவர் களமிறங்கவில்லை.

இந்நிலையில் அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மதிமுக துணைப் பொதுச்செயலர்கள் நாசரேத் துரை, தஞ்சாவூர் துரைபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் வகித்த பதவிகளை உயர்நிலைக்குழு உறுப்பினர் புலவர் செவந்தியப்பன், கன்னியாகுமரி மாவட்ட செயலர் வெற்றி உள்ளிட்ட நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த சூழலில் அந்தப் பதவிக்கு துரை வையாபுரியை கொண்டு வர வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூறிவருகின்றனர். வயது முதிர்ச்சி காரணமாக வைகோ ஒருவேளை ஓய்வு மேற்கொண்டால் பொதுச் செயலாளர் இடத்துக்கு துரை வையாபுரி வர வேண்டுமென்றால் இப்போதே துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் வைகோவுக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad