திமுக அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து: ஸ்டாலின் கொடுக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

திமுக அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து: ஸ்டாலின் கொடுக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட்!

திமுக அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து: ஸ்டாலின் கொடுக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிரடியான பல சம்பவங்களை செய்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ள நிலையில் நிதி நிலையை சரி செய்ய வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள பொருளாதார அறிஞர்களின் ஆலோசனையை பெற்று வருகிறது. 2030க்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு ஜிடிபியை உயர்த்துவதே இலக்கு என அறிவித்து ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
ஆட்சியில் அதிரடி காட்டும் ஸ்டாலின் கட்சியிலும் புதிய மாற்றங்களை முன்னெடுக்க உள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு கட்சிப் பதவிகளில் முன்னுரிமை அளிக்கவும், அதிகாரம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் குவிந்துவிடுவதை தவிர்க்கவும் ஒரு ஆளுக்கு ஒரு பதவி என்ற திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக கூறுகின்றனர்.

திமுகவில் மொத்தம் 77 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்களே அமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றனர். இதனால் ஆட்சியிலும் கட்சியிலும் இவர்களது கைகளே ஓங்கியுள்ளன. இதைத் தடுக்க அமைச்சர்களாக இருப்பவர்கள் கட்சிப் பதவிகளிலிருந்து விலக வேண்டும் என கூறப்படுகிறதாம். இதனால் புதியவர்களுக்கு கட்சிப் பதவிகள் வழங்கப்படும். இதனால் கட்சிக்கு புதிய இரத்தம் பாய்ச்சியது போல் இருக்கும்.

அமைச்சர்களாக இருப்பவர்கள் கட்சிப் பணியாற்றுவதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுவதால் இம்முறை செயல்பாட்டுக்கு வந்தால் அந்தப் பிரச்சினைகளும் தவிர்க்கப்படும். இதனால் 24 அமைச்சர்களின் கட்சிப் பதவிகள் பறிபோக உள்ளன.

அதிமுக, அமமுக, மநீம என பல கட்சிகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் திமுகவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு அவர்களது செல்வாக்கைப் பொறுத்து கட்சிப் பதவிகளை வழங்குவதற்கும் இந்த முறை உதவியாக இருக்கும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad