TN 12th Marksheet 2021: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்; பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

TN 12th Marksheet 2021: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்; பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

TN 12th Marksheet 2021: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்; பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் உயர்கல்வியில் சேருவதற்கு மதிப்பெண் சான்று அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிட சில வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

தேர்வு முடிவுகள் வெளியீடு

அதன் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த 19ஆம் தேதி காலை 11 மணியளவில் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் 99.97 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அறிவியல் பிரிவில் 30,600 மாணவர்களும், வர்த்தகப் பிரிவில் 8,909 மாணவர்களும், கலைப் பிரிவில் 35 மாணவர்களும் 551 முதல் 600 வரையிலான மதிப்பெண்களை பெற்றிருந்தனர்.

மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம்

இம்முறை ஒரு மாணவர் கூட மொத்த மதிப்பெண்ணை (600/600) பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 11 மணி முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in

பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

ஆகிய இணையதளங்களுக்கு சென்று மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலும் மேற்குறிப்பிட்ட இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பெண் பட்டியலில் திருப்தி ஏற்படாதவர்கள் மற்றும் பிளஸ் 1 தேர்விற்கு வர முடியாமல் போனவர்களுக்கு தனியாக அழைப்பு விடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இதற்காக எத்தனை பேர் பதிவு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad