பா.ஜ.க.,வை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மம்தா அழைப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

பா.ஜ.க.,வை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மம்தா அழைப்பு!

பா.ஜ.க.,வை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மம்தா அழைப்பு!

பா.ஜ.க.,வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு, முதன்முறையாக, தலைநகர் டெல்லிக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி வந்துள்ளார். நேற்று, பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் இன்று, டெல்லியில் காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார். அரை மணி நேரத்திற்கும் மேல் இந்த சந்திப்பு நடைபெற்றது.

சோனியா காந்தி உடனான சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
அரசியல் நிலவரம், பெகாசஸ் உளவு விவகாரம், கொரோனா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சோனியா காந்தி உடன் பேசினேன். இந்த சந்திப்பு நன்றாக அமைந்தது. பா.ஜ.க.,வை தோற்கடித்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரள வேண்டும். அனைவரும் ஒரே நோக்கத்தோடு செயல்பட்டால், இலக்கை எளிதாக அடையலாம்.

பா.ஜ.க.,வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரண்டு ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதே சோனியா காந்தியின் விருப்பம். மாநில கட்சிகளை காங்கிரஸ் நம்புகிறது.

மாநிலக் கட்சிகள் காங்கிரசை நம்புகிறது. பா.ஜ.க., பலம் வாய்ந்த கட்சி. அதை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் பலமும் அவசியம். பெகாசஸ் உளவு விவகாரத்தில் மோடி அரசு மவுனம் காப்பது ஏன்? கொள்கை முடிவுகள், விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை என்றால், டீக்கடைகளிலா நடைபெறும்?
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad