டிடிவி தினகரன் ரிட்டர்ன்ஸ்: அதிமுக - அமமுக இணையுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

டிடிவி தினகரன் ரிட்டர்ன்ஸ்: அதிமுக - அமமுக இணையுமா?

டிடிவி தினகரன் ரிட்டர்ன்ஸ்: அதிமுக - அமமுக இணையுமா?

சட்டமன்றத் தேர்தலில் அமமுக தலைமையில் கூட்டணி உருவானது. சசிகலா அரசியலைவிட்டு ஒதுங்கியிருப்பதாக அறிவித்திருந்த போதும் டிடிவி தினகரன் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அவரது ஆதரவாளர்கள் கருதினர். ஆனால் அமமுக கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் போனது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜுவிடம் தோல்வியைச் சந்தித்தார். தேர்தலுக்குப் பிறகு கட்சி நிர்வாகிகளிடம் தொடர்பில் இல்லாமல் உள்ளார் என தகவல்கள் வெளியாகின. இதனால் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உட்பட பல நிர்வாகிகள் திமுக பக்கம் சென்றுவிட்டனர். மேலும் சிலர் அதிமுகவை நாடிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

சசிகலாவும் டிடிவி தினகரனை சற்று ஒதுங்கியிருக்குமாறு கூறியதாகவும் ஒரு தகவல் உள்ளது. இதனால் அரசியல் ரீதியாக ஆலோசனை வழங்கவும் தனது சார்பில் பிறரிடம் பேசவும் சசிகலா தற்போது நடராஜனின் சகோதரர்களை பயன்படுத்தி வருகிறார் என்கிறார்கள். அதிமுகவுக்குள் சூறாவளி சுழன்றடிக்கும் நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் டெல்லி சென்று மோடி, அமித் ஷாவை சந்தித்துள்ளனர்.



இந்த சூழலில் திருச்சியில் உள்ள அண்ணாமலை நகரில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் பிரதமரை சந்தித்தது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.அதிமுக கட்சியை மீட்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வியை கடந்து, எங்களது இலக்கினை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணம் செய்வோம். அதிமுக - அமமுக இணையுமா என்றால் என்னிடம் பதில் கிடைக்காது. கொள்கைக்காக வந்தவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்.

சுயநலத்திற்கு அரசியல் பாதையில் வந்தவர்கள் விலைபோகக்கூடியவர்கள். அவர்கள் விலை போய்க்கொண்டு தான் இருப்பார்கள். அதிமுகவை மீட்க வேண்டும் என்பதே எங்களின் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும். அதனை செய்து வருகிறோம். முன்னாள் அமைச்சர் வீட்டில் நடந்த ரெய்டு விவகாரத்தில், உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.

அதிமுக கட்சியானது அது தொடங்கிய காலத்தில் இருந்தே எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் தலைமையில் தான் இருந்தது. தற்போது தான் அது மாறி இருக்கிறது. மீண்டும் சரி செய்யப்படும். திமுக ஆட்சியில் மகிழ்ச்சியான விஷயம் குறித்து யோசனை செய்து பதில் சொல்கிறேன். திமுகவினர் கடந்த காலத்தில் எதிர்த்து போராடியதை, அவர்களே மீண்டும் செய்கிறார்கள். சொன்னதை மறந்து செயல்படுகிறார்கள். திமுக ஆட்சியில் மகிழ்ச்சியை விட அவர்கள் பேசி வாக்குசேகரிக்க 

No comments:

Post a Comment

Post Top Ad