தமிழகத்தில் நிரந்தரமாக மூடப்படும் கல்லூரிகள்; மாணவர்கள் செம ஷாக்!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் தவிர சுமார் 554 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. இவற்றில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்தது. அதில் 40 தனியார் பொறியியல் கல்லூரிகள் போதிய கட்டமைப்பு வசதிகள் இன்றி இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. உடனே அந்த கல்லூரிகளை மூட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் போதிய அளவில் மாணவர்கள் சேரவில்லை என்ற விவரம் தெரியவந்தது. இதனால் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் விதிகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையொட்டி கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வின் போது தங்களிடம் இருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அண்ணா பல்கலைக்கழகத்திடமே கல்லூரிகள் ஒப்படைத்தன. எனவே அந்த இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக மாற்றி
பொறியியல் விண்ணப்பங்கள் விநியோகம்
நடப்பாண்டு கொரோனா நெருக்கடியால் பல்வேறு மாணவர்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். இதனால் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. முதல் நாளில் சுமார் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இருப்பினும் கடந்த ஆண்டை போல் நடப்பாண்டு பொறியியல் மீதான ஆர்வம் இருக்காது என்று சொல்லப்படுகிறது.
மூடப்படும் தனியார் கல்லூரிகள்
இதனால் மாணவர்கள் சேர்க்கையை எதிர்பார்த்து காத்திருக்கும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 2 லட்சம் இடங்கள் இருந்தன. அதில் சுமார் 50 ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை. நடப்பாண்டும் அதேபோன்ற நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் 16 தனியார் பொறியியல் கல்லூரிகள் தாமாக முன்வந்து,
தங்கள் கல்லூரிகளில் போதிய அளவில் மாணவர்கள் சேர்க்கை இல்லை என்பதை சுட்டிக் காட்டி கல்லூரிகளை மூடப் போவதாக அறிவித்துள்ளன. எனவே நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அண்ணா பல்கலைக்கழகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 15 கல்லூரிகள் மூடும் மனநிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment