இனிமே இப்படித்தான்; தமிழக பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக திருச்செந்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை தொடர்பாக மருத்துவர்களின் ஆலோசனையை பெற்ற பின்னரே தமிழகப் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
பள்ளிக் கல்வி சார்ந்த தரவுகள்
அதில், அனைத்து வகையான பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பள்ளிக் கல்வி சார்ந்த தரவுகள் 'கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை’ (EMIS) என்ற இணையதளம் வழியாக கையாளப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
EMIS இணையதளமானது பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு அடித்தளமாக விளங்குகிறது.
டிஜிட்டல் பாடப்புத்தகங்கள்
அதாவது, TN-DIKSHA எனப்படும் டிஜிட்டல் முறையிலான பாடப்புத்தகங்களை பெறுதல், மாணவர்கள் எந்த நேரத்திலும், எங்கேயும் கற்றுக் கொள்ளும் வகையில் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் தரவுகள், ஆசிரியர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் தகவல்கள், அரசு பள்ளிகளை மேம்படுத்த உதவும் வகையில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை செலுத்தும் வகையிலான வசதி
No comments:
Post a Comment