தேனியில் வைத்து ஒபிஎஸ்சை கிழித்த திமுக அமைச்சர் அன்பரசன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

தேனியில் வைத்து ஒபிஎஸ்சை கிழித்த திமுக அமைச்சர் அன்பரசன்!

தேனியில் வைத்து ஒபிஎஸ்சை கிழித்த திமுக அமைச்சர் அன்பரசன்!

தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தேனி மாவட்டத்தில் சிட்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் தப்புக்குண்டு பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மாணியத்துடன் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை 50பயணாளிகளுக்கு தலா ரூ.20லட்சம் வீதம், ரூ.1.05 கோடி மதிப்பில் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பரசன் கூறுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில் பயணாளிகளை தேர்வு செய்யாமல் புறம்போக்கு இடங்களில் குடிசை மாற்று வாரியம் சார்பாக குடியிருப்புகளை கட்டியுள்ளது.

ஒரு சிலரின் ஆதாயத்திற்காகாவே இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் 40 ஆண்டுகள் வாழ்வதற்கு தகுதியாக உள்ளனவா என்பது குறித்து கூட கடந்த ஆட்சியில் இருந்த ஓபிஎஸ் ஆய்வும் செய்யவில்லை” எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad