ஆப்கன் பிரச்னைக்கு இந்த நாடு தான் காரணம் - பாக்., பிரதமர் இம்ரான் "பளீச்!" - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

ஆப்கன் பிரச்னைக்கு இந்த நாடு தான் காரணம் - பாக்., பிரதமர் இம்ரான் "பளீச்!"

ஆப்கன் பிரச்னைக்கு இந்த நாடு தான் காரணம் - பாக்., பிரதமர் இம்ரான் "பளீச்!"

அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறியது. இந்நிலையில் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கன் பிரச்னை குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்ததாவது:
ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலைமைக்கு முழுக்க முழுக்க அமெரிக்கா தான் காரணம். 2001ல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆட்கொண்டது. தலிபான் பயங்கரவாதிகள் அல் கொய்தாவின் ஒசாமா பின்லேடனை ஒப்படைக்க மறுத்தது.ஆப்கன் படைகளுடன் இணைந்து தலிபான்களுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. ஆப்கன் பிரச்னைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அமெரிக்க அதை கையில் எடுத்தது.
இப்போது அரசியல் தீர்வுக்கு தலிபான்கள் தயாராக இல்லை. தலிபான்கள் பாரம்பரிய பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்டம் தொடங்கியுள்ளது. இது தொடர்ந்தால், பாகிஸ்தானில் உள்ள பாஸ்தூன் இன மக்களும் தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad