ஊர் முழுக்க பெங்களூர் சரக்கு வாடை: சேலம் போலீசார் செயலால் மக்கள் அதிர்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

ஊர் முழுக்க பெங்களூர் சரக்கு வாடை: சேலம் போலீசார் செயலால் மக்கள் அதிர்ச்சி!

ஊர் முழுக்க பெங்களூர் சரக்கு வாடை: சேலம் போலீசார் செயலால் மக்கள் அதிர்ச்சி!

கொரோனா இரண்டாவது அலையால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் போது தமிழ்நாட்டிற்குள் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
இதனைப் பயன்படுத்தி கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து அதிக அளவில் மது கடத்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து
சேலம் இரும்பாலை மதுவிலக்கு பிரிவு போலீசார் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி வாகன தணிக்கை நடத்தி மது மற்றும் மது கடத்திவரப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓமலூர் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்ட 2 ஆயிரத்து 654 மது பாட்டில்களும் மேட்டூர் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 361 மதுபாட்டில்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 515 மதுபாட்டில்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அளிக்க உத்தரவிட்டார்.அதன்படி மதுவிலக்கு டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் இரும்பாலை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ஓமலூர் சரபங்கா நதி அருகே அனைத்து மது பாட்டில்களையும் பெட்டி பெட்டியாக கொட்டி அதன்மீது வாகனத்தை ஏற்றி அளித்தனர்.

அளிக்கப்பட்ட மதுபானங்கள் ஆறுபோல் ஓடியது இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக மது நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்

கொரோனா காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் சாலையில் கொட்டி அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

Post Top Ad