Madurai aiims: இடத்தை தேர்வு செய்யாமல் இழுத்தடிக்கும் திமுக அரசு: மத்திய சுகாதாரத்துறை கடிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

Madurai aiims: இடத்தை தேர்வு செய்யாமல் இழுத்தடிக்கும் திமுக அரசு: மத்திய சுகாதாரத்துறை கடிதம்!

Madurai aiims: இடத்தை தேர்வு செய்யாமல் இழுத்தடிக்கும் திமுக அரசு: மத்திய சுகாதாரத்துறை கடிதம்!

மத்திய சுகாதாரத் துறைச் செயலர் தமிழ்நாடு அரசுக்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்:
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாகத் தற்காலிகமான இடத்தில் நடப்பாண்டில் 50 முதல் 100 மாணவர் சேர்க்கைக்குத் தேவையான வசதிகள், வகுப்பறைகள், அலுவலகத்திற்குத் தேவையான இடங்கள் ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்காலிகமான இடத்தை தமிழ்நாடு அரசு தேர்வு செய்து வழங்கினால் செலவுகள், அலுவலர்கள் தேர்வு, வசதிகள் அனைத்தையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும்.

மதுரையில் தற்காலிக இடத்தை தமிழ்நாடு அரசு தேர்வு செய்து வழங்கினால் வேலைகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்காலிகமான இடத்தில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடங்க கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜூலை 30ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad