எனக்கும் இந்தி தெரியாது - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

எனக்கும் இந்தி தெரியாது

எனக்கும் இந்தி தெரியாது

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வு இந்தியாவின் தீராத பிரச்சினைகளில் ஒன்றை மீண்டும் ஒரு முறை அடிக்கோடிட்டுக் காட்டியது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு அது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான தகவல்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டதாகவும், உள்துறை அமைச்சகம், தான் அனுப்பிய கேள்வி மனுவைத் திருப்பி அனுப்பியதுடன் இந்தியில் பதிலளித்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்தியில் பதில் தெரிவித்ததை எதிர்த்து ஞானசேகரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனக்கு இந்தி மொழி தெரியாது என்றும் தனக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டுமே தெரியும் என்றும் கூறியுள்ள ஞானசேகரன், இந்தியில் வழங்கிய பதிலை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தனக்குத் தெரிந்த மொழியில் மட்டுமே பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் கோரியிருருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு ஜூலை 27 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு ஆவணங்களைப் பார்த்த நீதிபதி வைத்தியநாதன், தனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்தார்., இது குறித்து ஒன்றிய அரசு வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினை ஏதோ ஒரு ஞானசேகரனுக்குத் தற்செயலாய் நேர்ந்ததல்ல. இந்தி தெரியாத பலருக்கும் இந்தியாவின் பல இடங்களிலும் பல தருணங்களிலும் ஏற்படும் அனுபவம்தான்.V

No comments:

Post a Comment

Post Top Ad