ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: தர்மசாலாவில் மேக வெடிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: தர்மசாலாவில் மேக வெடிப்பு!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: தர்மசாலாவில் மேக வெடிப்பு!


தென்மேற்குப் பருவமழை 10ஆம் தேதி முதல் வட மாநிலங்களில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் கணித்திருந்தது. இந்த நிலையில், நாட்டின் மிகமுக்கியமான சுற்றுலா தலமாக திகழும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இடை விடாமல் கொட்டித்தீர்த்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.

அங்குள்ள தர்மசாலாவில் மேக வெடிப்பு ஏற்பட்டு சிலமணிநேரங்கள் கொட்டித்தீர்த்த அதீத கனமழையால் பெருவெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. கடும் மழை வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் என்றும் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிக்கும் என்பதால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அம்மாநில முதல்வருடன் நிலச்சரிவு குறித்து கேட்டறிந்ததாகவும்

பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருவதாக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad