பயப்படாம, தைரியமா விளையாடுங்க..! இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

பயப்படாம, தைரியமா விளையாடுங்க..! இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

பயப்படாம, தைரியமா விளையாடுங்க..! இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!


முழு மனதுடன் சிறப்பாக விளையாடுங்கள் என, ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:
ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள வீரர்களான உங்களுக்காக நாடு முழுவதும் மக்கள் மிகவும் எழுச்சியுடன் உற்சாகத்தையும், ''நமோ ஆப்'' மூலம் உங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். வீரர்களிடம் ஒழுக்கம், கட்டுப்பாடு , குறிக்கோள், அனைத்தும் உள்ளது. உங்களின் நற்பண்புகள் புதிய இந்தியாவிற்கு வழிகாட்டும். எதிர்பார்ப்புடன் விளையாட வேண்டும். உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்யுங்கள்.


பலவிதமான வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையோடு நாடு உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது. முழு மனதுடன் சிறப்பாக விளையாடுங்கள். ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு உங்களுக்கு தேவையான உதவிகளை விளையாட்டு அமைச்சகம் மூலம் செய்து வருகிறது. நாடு உங்களுடன் துணை நிற்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதற்கிடையே, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள வீரர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக கலந்துரையாடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad