சினிமாவுக்கு உதயநிதி குட்-பை: கடைசி படம் என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

சினிமாவுக்கு உதயநிதி குட்-பை: கடைசி படம் என்ன?

சினிமாவுக்கு உதயநிதி குட்-பை: கடைசி படம் என்ன?


திமுக தலைவர் ஸ்டாலின் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வசம் வைத்திருந்த அதிகாரமிக்க பதவியான திமுக இளைஞரணிச் செயலாளராக கடந்த 2019ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். பதவியேற்ற அடுத்த சில நாட்களிலேயே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம். நிர்வாகிகள் கூட்டம் என்று சுணக்கமாக இருந்த இளைஞரணியை கட்டி எழுப்பினார் உதயநிதி ஸ்டாலின்.

இதனைத்தொடர்ந்து, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சித் தலைமை வாய்ப்பளித்தது. அந்த தொகுதியில் வெற்று பெற்ற உதயநிதி ஸ்டாலின், முதல் நாளில் இருந்தே தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து விசிட் அடித்து வருகிறார்.

வெற்றிபெற்ற நாளிலிருந்து ஒருநாள் கூட தொகுதிக்கு போகாமல் இருந்ததில்லை. வீடு வீடாக சென்று குறைகளை கேட்கிறார்; அதன் மீது நடவடிக்கை எடுக்கிறார். எம்.எல்.ஏ.வாக தொகுதிக்கான நலத்திட்டப் பணிகள் மட்டுமல்லாமல், கட்சியை வளர்க்கும் பணிகளிலும் உதயநிதி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். திமுக வீக்காக இருக்கும் இடங்களை கண்டறிந்து அதனை களையெடுத்து, அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்டங்களையும் அவர் வகுத்து வருகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதனால், நடிப்பு பணிகளில் அவரால் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக கட்சியிலும் ஆட்சியிலும் பிரதானப்படுத்தப்பட்டு வரும், உதயநிதி, முழு நேர அரசியலில் ஈடுபடும் பொருட்டு சினிமாவுக்கு குட்பை சொல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கைவசம் மூன்று படங்கள் உள்ளன. அதனை முடித்துக் கொடுத்து விட்டு, சினிமாவுக்கு அவர் முழுக்கு போடவுள்ளதாக தெரிகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் படம் தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படமாக இருக்கும் என்கிறார்கள். நடிப்புக்கு அவர் குட்பை சொன்னாலும் தயாரிப்பு பணிகளில் அவரது நிறுவனம் தொடர்ந்து ஈடுபடும் என்று தெரிகிற

No comments:

Post a Comment

Post Top Ad