பழங்குடியின மக்களின் காட் பாதர்; ‘ஸ்டான் சுவாமி’ அஸ்திக்கு அஞ்சலி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 24, 2021

பழங்குடியின மக்களின் காட் பாதர்; ‘ஸ்டான் சுவாமி’ அஸ்திக்கு அஞ்சலி!

பழங்குடியின மக்களின் காட் பாதர்; ‘ஸ்டான் சுவாமி’ அஸ்திக்கு அஞ்சலி!


தமிழகத்தில் பிறந்தவர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி. ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் வாழ்க்கைக்காக பணி செய்து அதற்கான உரிமை போராட்டங்களை முன்னெடுத்தார். இதனால் ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்தார்.
ந்நிலையில் அருட்தந்தை ஸ்டேன் சுவாமிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது அஸ்தி தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், ஜனநாயக மக்கள் அமைப்பு பிரதிநிதிகள், மலர்தூவி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, தர்மபுரி சமுதாய நல்லிணக்க மேடை, பல்வேறு அரசியல் கட்சியினர், மக்கள் இயக்கம் என அனைவரும் அருட்தந்தை ஸ்டேன் சுவாமியின் இழப்புக்கு நீதி கேட்டும், அநீதி சட்டங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் கண்டனம் தெரிவித்து கண்டன கூட்டம் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூய இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை பெல்லார்மின் மேற்கொண்டார். இதில் புனித மரியன்னை மேல்நிலை பள்ளி தாளாளர் அருட்தந்தை ஆல்பர்ட் ஜோசப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad