ஒரே உத்தரவு, இரு கட்சிகளுக்கும் பங்கு: வன்னியர் இடஒதுக்கீட்டால் ராமதாஸ் பெருமிதம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

ஒரே உத்தரவு, இரு கட்சிகளுக்கும் பங்கு: வன்னியர் இடஒதுக்கீட்டால் ராமதாஸ் பெருமிதம்

ஒரே உத்தரவு, இரு கட்சிகளுக்கும் பங்கு: வன்னியர் இடஒதுக்கீட்டால் ராமதாஸ் பெருமிதம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு மசோதா கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில், இந்த சிறப்பு ஒதுக்கீட்டை பிப்ரவரி 26 2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை நேற்று வெளியிட்டு முதல்வர்
ஸ்டாலின் ஆணையிட்டார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் துவங்கப்பட்ட நிலையில் வன்னியர்கள் 10.50% உள் இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள ராமதாஸ் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அது தொடர்பாக ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், '' தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.50% நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும். வன்னியர்களின் கல்வி - வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள்''.

என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad