அ.தி.மு.க., மகளிரணி செயலராக பா.வளர்மதி நியமனம்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., அறிவிப்பு
அ.தி.மு.க.,வின் மகளிரணி செயலாளராக, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி நியமனம் செய்யப்படுவதாக, அக்கட்சி தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கழக இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா. வளர்மதி, கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் வைகைச்செல்வன் ஆகியோர், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கழக மகளிர் அணி செயலாளராக, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியும், இணை செயலாளராக, மரகதம் குமரவேல் எம்.எல்.ஏ.,வும் நியமிக்கப்படுகின்றனர். கழக இலக்கிய அணி செயலாளராக முனைவர் வைகைச்செல்வன், கழக வர்த்தக அணி நிர்வாகிகள் செயலாளராக வி.என்.பி., வெங்கட்ராமன், இணை செயலாளராக, ஏ.எம். ஆனந்தராஜா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
No comments:
Post a Comment