13 சிங்கங்களுக்கும் வந்த கொரோனா ரிப்போர்ட்: வண்டலூர் உயிரியல் பூங்கா வெளியிட்ட அறிவிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 23, 2021

13 சிங்கங்களுக்கும் வந்த கொரோனா ரிப்போர்ட்: வண்டலூர் உயிரியல் பூங்கா வெளியிட்ட அறிவிப்பு

13 சிங்கங்களுக்கும் வந்த கொரோனா ரிப்போர்ட்: வண்டலூர் உயிரியல் பூங்கா வெளியிட்ட அறிவிப்பு

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள கோவிட் குறித்த மூன்று சிங்கங்களின் நாசி மற்றும் மலக்குடல் திரவ மாதிரிகள் SARS CoV-2 மறு ஆய்வுக்காக ஜூலை 9 அன்று விலங்கு நோய்களுக்காக தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அனைத்து மாதிரிகளும் ஆய்வு செய்ததில் கோவிட் நெகட்டிவ் என்பதை உறுதி செய்து ஜூலை 14 அன்று விலங்கு நோய்களுக்கான தேசிய பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.

மேலும், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள 5 விலங்குகளுக்கான நாசி மற்றும் மலக்குடல் திரவ மாதிரிகளை ஜூலை 17 அன்று விலங்கு நோய்களுக்கான தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி அவை அனைத்துமே நெகட்டிவ் என ஜூலை 23 (இன்று) தெரியப்படுத்தியுள்ளது.

இதனால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள அனைத்து 13 சிங்கங்களின் தற்போது பரிசோதனை செய்ததில்

கொரோனா தொற்று எதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சிங்கங்களும் மீளுருவாக்கம் பெற்று எந்தவொரு கொரோனா அறிகுறிகளும், சிக்கல்களில் இல்லாமல் தற்போது நல்ல நிலையில் உள்ளன. இருந்தபோதிலும், வைரஸ் பரவுவதை கருத்தில்கொண்டு சிங்கங்களின் உடல் நிலையை மிகவும் உண்ணிப்பாக வன உயிரின மருத்துவக்குழு மற்றும் களப்பணியாளர்கள் தொடர்ந்து அனைத்து நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad