மாநில மொழிகளை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது: தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 23, 2021

மாநில மொழிகளை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது: தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா

மாநில மொழிகளை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது: தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா


நாடாளுமன்ற தகவல் தொடர்புகளில், மாநில மொழிகளையும், ஆங்கிலத்தையும் ஒன்றிய அரசு புறக்கணிப்பதாக மாநிலங்களவை தி.மு.க., குழுத் தலைவர் திருச்சி சிவா குற்றம் சாட்டி உள்ளார்.

டெல்லியில், மாநிலங்களவத தி.மு.க., குழுத் தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நேற்று முன்தினம் கொரோனா தொடர்பாக இரண்டு அவைகளின் கட்சி குழு தலைவர்களை அழைத்து பிரதமர் மோடி தலைமையில் விளக்கம் கொடுத்தார்கள். அப்போது, இந்தி மொழியில் மட்டுமே உள்ள ஒரு கோப்பு கொடுக்கப்பட்டது.

ஆங்கிலமும், இந்தியும் ஆட்சி மொழியாக உள்ள இந்தியாவில் இது ஏன்? இது ஆங்கிலத்தையும் அகற்றும் முயற்சியா ? இந்தியில் மட்டும் விவரங்கள் இடம் பெற்று இருந்தது ஏன் கேள்வி எழுப்பினேன். இந்த விவகாரத்தை சரிசெய்வதாக குடியரசு துணை தலைவர் உறுதி அளித்து உள்ளார்.

ஒரு பக்கம் மாநில மொழிகளுக்கு பாராட்டு, மற்றொரு பக்கம் இந்தி திணிப்பு என ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஆட்சி மொழியில் உள்ள ஆங்கிலத்தையும் அழிக்க கூடிய நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நிற்கும் விவசாயிகள் ஆதரவாகவும், பெகாசஸ் விவகாரம் , விலைவாசி உயர்வு குறித்து என எதை குறித்தும் விவாதிக்க ஒன்றிய அரசு பேச தயாராக இல்லை. நாடாளுமன்ற அவைகளை ஒன்றிய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

ஒரு அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும் என்றால் அது மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும், ஆனால், அந்த சட்டத்தை மக்களே எதிர்க்கிறார்கள் என்றால் அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் அதை செய்ய ஒன்றிய அரசு மறுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad