‘ஷூ’ கூட இல்லாத மதுரை வீராங்கனை ரேவதி: ஒலிம்பிக் செல்வது எப்படி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

‘ஷூ’ கூட இல்லாத மதுரை வீராங்கனை ரேவதி: ஒலிம்பிக் செல்வது எப்படி?

‘ஷூ’ கூட இல்லாத மதுரை வீராங்கனை ரேவதி: ஒலிம்பிக் செல்வது எப்படி?


மதுரையைச் சேர்ந்த ரேவதி, இந்தியத் தடகள அணியில் இடம்பெற்று ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார். பெற்றோரைச் சிறு வயதிலேயே இழந்த நிலையில், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த அவர், தற்போது ஒலிம்பிக்கில் விளையாட உள்ளார் என்ற தகவல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே பெருமிதம் கொள்ள வைத்துள்ளது.

ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற ரேவதி, ஞாயிறன்று நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53. 55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

தனது பயணம் குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எனக்குப் பெற்றோர் இல்லை. நான், எனது பாட்டி மற்றும் சகோதரியுடன் மதுரையில் வசித்துவருகிறேன். மிகவும் கஷ்டமான குடும்பச் சூழலால் பாட்டி என்னைச் சிறுவயதிலேயே விடுதியில் சேர்த்துவிட்டார்.

12ஆம் வகுப்பு படித்தபோது மதுரையில் நடந்த ஆடிஷனில் கலந்துகொண்டேன். அப்போது ஷு கூட இல்லாமல் வெறும் காலில் ஓடுவதைப் பார்த்த பயிற்சியாளர் கண்ணன் எனக்குப் பயிற்சி அளிப்பதாகக் கூறினார். அவர் இலவச விடுதி வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

பிறகு தேசிய அளவிலான ஜூனியர், சீனியர் போட்டிகளில் வெற்றிபெற்றதால், பாட்டியாலாவில் உள்ள கேம்ப்பில் தங்கிப் பயிற்சிபெறும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ஆசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன்.

அதன்பிறகு முழங்காலில் அடிப்பட்டுச் சிரமப்பட்ட போதும், அதிலிருந்து மீண்டுவரப் பயிற்சியாளர்களும் எனது பாட்டியும் உதவிசெய்து, என்னைப் போட்டிகளில் பங்கேற்க ஊக்கப்படுத்தினர். காயத்திலிருந்து மீண்டுவந்தபிறகு தற்போது ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

Post Top Ad