செந்தில் பாலாஜி கண்டிப்பாக செய்வார்: நம்பிக்கை தெரிவிக்கும் கனிமொழி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

செந்தில் பாலாஜி கண்டிப்பாக செய்வார்: நம்பிக்கை தெரிவிக்கும் கனிமொழி

செந்தில் பாலாஜி கண்டிப்பாக செய்வார்: நம்பிக்கை தெரிவிக்கும் கனிமொழி

எண்ணூர் கழிமுகத்தில், அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் நீர் நிலைகள் தேங்குவதோடு மாசு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
நீண்ட காலமாக இப்பிரச்சினை தொடர்ந்து வரும் சூழலில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இதற்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி தரும் என எண்ணூர்-காட்டுக்குப்பம் மீனவ கிராம மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு மத்தியில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த கனிமொழி எம்.பியை எண்ணூர்-காட்டுக்குப்பம் மீனவ கிராமமக்கள் நேற்று சந்தித்து பேசினர்.

அவர்களது பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அறிந்துகொண்ட கனிமொழி, எண்ணூர் அனல் மின் நிலைய கழிவுகள் விவகாரத்தில் திமுக அரசு நிச்சயம் தீர்வு தரும் என நம்பிக்கை அளித்தார்

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எண்ணூர் அனல்மின் நிலையம் நிலக்கரி சாம்பலையும் மணலையும் எண்ணூர் கழிமுகத்தில் கொட்டுவதால், நீர் நிலைகளில் ஏற்பட்ட மாசு, கிராம மக்களின் வாழ்வாதார பாதிப்பு மற்றும், கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இன்மை ஆகியவற்றை விளக்கி சொன்னார்கள்.''

''அதிமுக அரசு இந்த மக்களின் போராட்டங்கள் கோரிக்கைகள் எதையும் கண்டுகொள்ளவில்லை. நேற்று இந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் இவர்களின் வாழ்வாதாரத்தை, ஆற்றை, அலையாற்றி காடுகளை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்'' என்று பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad