‘அண்ணே நீங்க எப்படின்னு தெரியும்’: ஓபிஎஸ்-யிடம் ஓப்பனாக பேசிய ஈபிஎஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

‘அண்ணே நீங்க எப்படின்னு தெரியும்’: ஓபிஎஸ்-யிடம் ஓப்பனாக பேசிய ஈபிஎஸ்!

‘அண்ணே நீங்க எப்படின்னு தெரியும்’: ஓபிஎஸ்-யிடம் ஓப்பனாக பேசிய ஈபிஎஸ்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி சென்று பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை சந்தித்து விட்டு சென்னை திரும்பியுள்ளனர். சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றியதுதான் இவர்களது டெல்லி பயணம் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னரே சசிகலாவை அதிமுகவில் இணைத்து வைக்க பாஜக முனைப்பு காட்டியது. ஓபிஎஸ் அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தபோதும், எடப்பாடியின் விடாப்படியான முடிவு காரணமாக அவரால் கட்சிக்குள் வர முடியவில்லை.

ஆனால், தேர்தலில் எடப்பாடி சொல்லிய வெற்றி கிடைக்காததாலும், சசிகலா ஆடியோ வெளியிட்டு வருவதற்கிடையே அவருக்கு தொண்டர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாலும், அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து அதிமுகவை பலப்படுத்தி வருகிற தேர்தல்களில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் கணக்காக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விவரம் அறிந்தவர்கள்.



இத்தகைய சூழலில் டெல்லி சென்ற அதிமுக இரட்டை தலைமையிடம் சசிகலாவை அதிமுகவுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டதாம் பாஜக மேலிடம். அதற்கு ஓபிஎஸ் அங்கேயே சரியென்று ஒப்புக் கொள்ள, ஈபிஎஸ் மட்டும் சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். விரைவில் முடிவெடுக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளது டெல்லி மேலிடம்.

இந்த நிலையில், திமுக அரசுக்கு எதிரான அதிமுகவின் போராட்டத்தின்போது, “ஒரு நபர், ஒருகுடும்பம் மீண்டும் ஆதிக்கம் செலுத்த முடியாது. யாரும் அதிமுகவை கைப்பற்ற முடியாது” என்று ஓபிஎஸ் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியும் எங்களை யாரும் பிடிக்க முடியாது என்று பேசி வருகிறார்.

இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, எல்லாம் டெல்லியில் பேசி முடிக்கப்பட்டதுதான் என்கிறார்கள் சிரித்துக் கொண்டே. அமித் ஷாவுடனான சந்திப்புக்கு பின்னர், டெல்லியிலேயே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் தனியாக பேசியுள்ளனர். அப்போது, “சின்னம்மாவுடன் நீங்க தொடர்பில் இருப்பது எனக்கு தெரியும்ணே. அவருக்கு ஆதரவாதான் நீங்க இருக்கீங்க. அதுவும் எனக்கு தெரியும்ணே. அதப்பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்லை. என்னோட கவலையெல்லாம் டிடிவி தினகரனை பத்தியதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் சில பொறுப்புகளை கேட்டு பெற்றது ஏன் என்று ஓபிஎஸ்-யிடம் அப்போது விளக்கிய எடப்பாடி, எவ்வளவுதான் பிரச்சினை வந்தாலும் உங்கள விட்டுக் கொடுத்தது இல்லைண்ணே. உங்க மேல எப்பவுமே எனக்கு தனிப்பட்ட மதிப்பு இருக்கும் என்று கூறி ஓபிஎஸ்-சை நெகிழச்செய்து விட்டாராம்.

சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தாலும், ஓட்டுமொத்தமாக அவருக்கு சாதகமாக முடிவெடுப்பதிலும் ஓபிஎஸ் சிறிது தயக்கம் காட்டி வருகிறார். ஏனென்றால் அவருக்கு அக்குடும்பத்திடம் சில தீர்க்க வேண்டிய விஷயங்களும் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சசிகலா கைக்கு மொத்தமாக கட்சி சென்றால் நம்முடைய கதி என்ன என்பது பற்றி ஈபிஎஸ் எடுத்துக் கூறியுள்ளார்.



ஒருவேளை சசிகலா மறுபடியும் கட்சிக்குள்ள வந்தாலும் இப்போது இருகின்றன மரியாதை, அதிகாரம் அனைத்தும் நமக்கு இருக்க வேண்டும். எனவே, ‘இவங்க சொல்றதால உடனடியா எதுக்கும் சரின்னு சொல்லிட வேண்டாம். நமக்கு சில உத்தரவாதங்கள் கிடைச்சதுக்கு அப்புறமா பாத்துகலாம் கொஞ்டம் டைம் ஆகும் அதுக்கு’ என்று ஈபிஎஸ் சொன்னதை கேட்டதன் பின்னணியிலேயே அதிமுகவை யாரும் கைபற்ற முடியாது என்று ஓபிஎஸ் பேசியுள்ளார் என்கிறார்கள். ஆனால், இதெல்லாம் சசிகலாவுக்கும் தெரியாமல் இல்லை. பேச வரட்டும் அப்போ பாத்துக்கலாம் என்று கூறிவிட்டாராம் அவர் ஒரே வார்த்தையில்.

No comments:

Post a Comment

Post Top Ad