முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சிக்னல்; களத்தில் இறங்கிய பிடிஆர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சிக்னல்; களத்தில் இறங்கிய பிடிஆர்!

முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சிக்னல்; களத்தில் இறங்கிய பிடிஆர்!

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிதித்துறையின் செயல்பாடுகள், துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம், புதிதாகத் திட்டமிட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 30) நடைபெற்றது. அதில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

இந்த கூட்டத்தில் நிதித்துறையின் கீழ் செயல்படும் துறைகளான கருவூலம் மற்றும் கணக்குகள், ஓய்வூதியம், உள்ளாட்சி நிதித் தணிக்கை, கூட்டுறவுத் தணிக்கை, துறைத் தணிக்கை மற்றும் நிறுவனத் தணிக்கை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மற்றும் சிறு சேமிப்பு ஆகிய துறைகளின் செயல்பாடுகளை முதல்வர் ஆய்வு செய்தார். மேலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாட்டு நிலை,

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்

பயன்பெற்று வரும் பயனாளிகளின் விவரங்கள், சார்நிலைக் கருவூலங்களின் செயல்பாடுகள், அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தணிக்கை முறைகளை வலுப்படுத்தி, தணிக்கைத் தடைகள் எழாத வண்ணம், சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்திடவும் அறிவுறுத்தினார். அரசின் வரவு - செலவுத் திட்ட நடவடிக்கைகளில் மற்றும் வரவு - செலவுத் திட்டம் தயாரிப்பதில்

அமைச்சர் முக்கிய உத்தரவு

நவீன வழிமுறைகளைக் கையாளுதல், எளிய மற்றும் பேச்சு வழக்கு மொழியில் குடிமக்களுக்கான வரவு - செலவுத் திட்டத்தை வெளியிடுதல் போன்ற புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் நிர்வகிக்கப்படும், திட்டத் தயாரிப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாகக் கேட்டறிந்த முதல்வர், ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்ததாக தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad