பாஜக அண்ணாமலை மோடியை எதிர்த்து போராட வேண்டும்... விவசாய சங்கம் வெயிட்டான வேண்டுகோள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

பாஜக அண்ணாமலை மோடியை எதிர்த்து போராட வேண்டும்... விவசாய சங்கம் வெயிட்டான வேண்டுகோள்!

பாஜக அண்ணாமலை மோடியை எதிர்த்து போராட வேண்டும்... விவசாய சங்கம் வெயிட்டான வேண்டுகோள்!

சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்ப்பாசனத் துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவை, விவசாய சங்கத் தலைவர் பி. ஆர் பாண்டியன் இன்று சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

அதன் பின்னர் அவர் ய்தியாளர்களிடம் கூறியது:

கர்நாடக முதல்வர் மேகதாதுவில் அணை கட்டுவோம் என கூறி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் நீர்ப்பாசனத் துறைக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். வனத்துறையை போல் நீர்ப்பாசனத் துறைக்கும் தன்னாட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும்.

காவிரியின் குறுக்கே பரமத்திவேலூர் பகுதியில் ஒரு ஏக்கருக்கு 15 லட்ச ரூபாய் என கட்டணம் நிர்ணயித்து முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் தண்ணீர் எடுத்து தொழில் நிறுவனங்களுக்கு விற்பது மக்கள் நலனுக்கு எதிரானது. அரசு இதில் தலையிட்டு பகல் கொள்ளையை தடுக்க வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 5 ஆம் தேதி தஞ்சையில் காவிரி நீர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். கர்நாடக மக்கள் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள் என்றும் சொல்கிறார். அவரே முரணாக பேசுகிறார்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இதுவரை தலைவரை நியமனம் செய்யாமல் அதன் செயல்பாடுகளை முடக்கியுள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு.

ஸ்ரீரங்கம் டூ மணப்பாறை... பஸ் வசதி.. டிரைவராக மாறிய எம்எல்ஏ!
எனவே, காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உரிமைக்காக போராட வேண்டும் என்றால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமரை மோடியை எதிர்த்துதான் போராட வேண்டும். அப்படி அவர் போராடினால் விவசாயிகள் அனைவரும் அவருக்கு ஆதரவு தருவார்கள் என்று பி.ஆர். பாண்டியன் செம லாஜிக்காக தெரிவித்துள்ளார்..

No comments:

Post a Comment

Post Top Ad