எங்களுக்குள் பிரச்சினையில்லை.. மோடி சூசகமாக சொன்ன மெசேஜ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 3, 2021

எங்களுக்குள் பிரச்சினையில்லை.. மோடி சூசகமாக சொன்ன மெசேஜ்!

எங்களுக்குள் பிரச்சினையில்லை.. மோடி சூசகமாக சொன்ன மெசேஜ்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜில்லா பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக அபார வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், வெற்றிக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அவரது குழுவினரும்தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.



உத்தரப் பிரதேசத்தில் ஒட்டுமொத்த 75 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சீட்டுகளில் 67 சீட்டுகளை பாஜக கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “உ.பி மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்பது வளர்ச்சிக்கும், பொது சேவைக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கிடைத்த ஆசிர்வாதம்.

இதற்கான பெருமை அனைத்தும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கொள்கைகளுக்கும், கட்சித் தொண்டர்களின் கடின உழைப்புக்குமே சேரும். உ.பி அரசுக்கும், பாஜகவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கையாண்ட விதம் பாஜகவிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அண்மையில் பேசப்பட்டது. உ.பி மாநில பாஜகவிலேயே சில மூத்த தலைவர்கள் அரசை விமர்சித்தனர்.

இதுமட்டுமல்லாமல், யோகி மீது மோடி அதிருப்தியில் இருப்பதாகவும், உ.பி முதல்வர் மாற்றப்படலாம் எனவும் சில தகவல்கள் வெளியாகின. இதை உடைக்கும் வகையில் பிரதமர் மோடியும், யோகியும் நேரில் சந்தித்து பேசினர். இந்நிலையில் தற்போது மோடியே நேரடியாக வாழ்த்தியிருப்பது யோகி மீது அதிருப்தி இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad