அதிர்ச்சியும் இல்ல, ஏமாற்றமும் இல்ல... போய் வேலைய பாருங்க... கஸ்தூரி சர்காஸ்டிக் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

அதிர்ச்சியும் இல்ல, ஏமாற்றமும் இல்ல... போய் வேலைய பாருங்க... கஸ்தூரி சர்காஸ்டிக்

அதிர்ச்சியும் இல்ல, ஏமாற்றமும் இல்ல... போய் வேலைய பாருங்க... கஸ்தூரி சர்காஸ்டிக்


கடந்தாண்டு டிசம்பர் 31இல் கட்சியை அறிவிக்கும் தேதியை அறிவிக்கப்போவதாக கூறிய ரஜினி திடீரென உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, ரஜினி தேர்தலில் இருந்து விலகுவதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், ''நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள்'' என கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும் அறிவித்து அரசியலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளியை வைத்துள்ளார்.

இந்த முறை ரஜினியின் அறிவிப்பு பெரிய அளவில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. ரஜனியின் கலை பணியும், மக்களின் சேவையும் போதுமானதாகும் என்ற கருத்தே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இந்நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி தமது ட்விட்டர் பக்கத்தில், '' இன்றைய அறிவிப்பில் யாருக்கும் புதிதாய் அதிர்ச்சியோ பெரிய ஏமாற்றமோ இருந்திருக்க வாய்ப்பில்லை. அண்ணாத்தே வெளியீட்டிற்கு பின் இன்னொரு அறிவிப்பையையும் எதிர்பார்க்கலாம். ரஜினி காட்டிய வழியில் ரசிகர்களும் சொந்த வேலையை கவனிக்க போகலாம்'' என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad