தடுப்பூசி போடனுமா, இனி இங்கேயும் இலவசம்: அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து ஒரு தயக்கம் பொது மக்களிடையே நிலவியது. ஆனால் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பரவலாக்கப்பட்ட நிலையில், கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி இன்றியமையாதது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.
இதனால் தடுப்பூசி போடும் மையங்களின் வாசலில் இரவு முழுவதும் ஆண்களும், பெண்களும் காத்திருக்கும் சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நடைபெறுகின்றன.
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் அதிக விலை கொடுத்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பல தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் காலியாகமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வருகிற புதன்கிழமை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment