கோவையைச் சிறப்பாகக் கவனிக்கும் எஸ்பி வேலுமணி!
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம், அரசமரம், ஐயுடிபி காலணி, வடக்கு ஹவுசிங் யூனிட், உட்பட பல்வேறு இடங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதிய உணவுத் திட்டத்தை முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடங்கி வைத்தார்.
மேலும் அவர் கொரோனா நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட நோய்த் தடுப்பு உபகரணங்களை பொது மக்கள் பயன்பெறும் வகையில் அவர் வழங்கிச் சென்றார்.
குறிப்பாக முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவுத் திட்டத்தை முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி துவக்கி வைத்தார்.அதேபோல் நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றும் விதமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை வழங்கினார்.
No comments:
Post a Comment