தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு: நாளை முக்கிய முடிவு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு: நாளை முக்கிய முடிவு?

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு: நாளை முக்கிய முடிவு?

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக
முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கையில் 30 க்கும் குறைவாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பேருந்துகள் 50% இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரிக்கான பேருந்து சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா தளங்களுக்கு மக்கள் அதிகம் புறப்பட தயாராகியுள்ளதால் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலிருந்து நீலகிரி சென்றாலும் இ-பாஸ் மாற்று கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையை மாவட்ட நிர்வாகம் பின்பற்றி வருகிறது.

இந்த நடைமுறை பிற சுற்றுலா பகுதிகளுக்கும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில், சுற்றுலா பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பலர் கொரோனா விதிகளை மீறுவதாக ஒன்றிய அரசு சுட்டிக்காட்டியதுடன், இதனால் ஊரடங்கு தளர்வு திரும்பபெறப்படும் என்று எச்சரித்துளளது. ஆகையால், மாநில அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தலாம்.

அதுபோல, சில மாநிலங்களில் திரையரங்குகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இன்னமும் திறக்கப்படவில்லை. ஆகையால், குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 50% இருக்கைக்களுடன் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்ற தகவல் தலைமை செயலக வட்டாரங்களில் வெளிப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad