நேருக்கு நேர் சந்திக்கும் ஈபிஎஸ் - சசிகலா: அரசியல் பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

நேருக்கு நேர் சந்திக்கும் ஈபிஎஸ் - சசிகலா: அரசியல் பரபரப்பு!

நேருக்கு நேர் சந்திக்கும் ஈபிஎஸ் - சசிகலா: அரசியல் பரபரப்பு!

அதிமுக அவைத்தலைவராக இருந்து வருபவர் மதுசூதனன். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். சசிகலாவை தீவிரமாக ஆதரித்து வந்த மதுசூதனன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் அவருடன் கை கோர்த்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டார்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டார். தற்போது, மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல் நலம் குறித்து விசாரிக்க சசிகலா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஏற்கனவே, சற்று நேரத்திற்கு முன், மதுசூதனனின் உடல்நிலை குறித்து

எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு சென்ற நிலையில், சசிகலாவும் சென்றுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad