மின் கட்டண வசூல்; தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

மின் கட்டண வசூல்; தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!

மின் கட்டண வசூல்; தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!


தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெறும் போது நுகர்வோரிடம் இருந்து காப்பு வைப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை மின்சார வாரியம் வசூலித்து வருகிறது. இந்த தொகையானது மின் பயன்பாட்டைப் பொறுத்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, மின் இணைப்பு பெறும் போது தெரிவித்திருந்த அளவை விட அதிக மின்சாரம் பயன்படுத்தினால் கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது.

பணிகள் நிறுத்திவைப்பு

ஒருவேளை மின் பயன்பாடு குறைந்திருந்தால் கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த சூழலில் கொரோனா பரவல் பல்வேறு நெருக்கடிகளை அளித்தது. அதன் ஒருபகுதியாக 2020-21ஆம் நிதியாண்டிற்கான கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்தது.

மின்வாரியம் பரபரப்பு உத்தரவு

இதையடுத்து கூடுதல் காப்பு வைப்புத் தொகை குறித்து ஆய்வு நடத்த அனைத்து மின் பகிர்மான வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, மின் நுகர்வோரின் காப்பு வைப்புத் தொகை தற்போது கணக்கிடப்பட்டுள்ளதை விட குறைவாக இருப்பின் மீதமுள்ள தொகையை வசூலிக்கலாம்.

நுகர்வோருக்கு ஹேப்பி நியூஸ்

அதிகமாக இருந்தால் அதை சரிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால்

கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமே என்ற அச்சம் தமிழக மக்களிடம் எழுந்தது. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக மின்வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் திடீரென தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தில், ஜூலை மாத மின் கட்டணத்துடன் கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கக் கூடாது.

இதுதொடர்பான உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது. எனவே மின் பயன்பாட்டிற்குரிய கட்டணத்தை மட்டும் தமிழக மக்கள் செலுத்தினால் போதும். இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad