ஆத்தூர் வசிஷ்ட நதியில் மணல் கடத்திய 2 பேர் சுற்றிவலைப்பு: டிராக்டர் பறிமுதல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

ஆத்தூர் வசிஷ்ட நதியில் மணல் கடத்திய 2 பேர் சுற்றிவலைப்பு: டிராக்டர் பறிமுதல்!

ஆத்தூர் வசிஷ்ட நதியில் மணல் கடத்திய 2 பேர் சுற்றிவலைப்பு: டிராக்டர் பறிமுதல்!


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி வசிஷ்ட நதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் வசிஷ்ட நதிக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது வசிஷ்ட நதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரையை கையும் களவுமாக பிடித்தனர்.
தொடர்ந்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தன்ர். அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad