திமுகவினர் இந்த விஷயத்தை உடனே நிறுத்துங்க; ஆர்.எஸ். பாரதி எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

திமுகவினர் இந்த விஷயத்தை உடனே நிறுத்துங்க; ஆர்.எஸ். பாரதி எச்சரிக்கை!

திமுகவினர் இந்த விஷயத்தை உடனே நிறுத்துங்க; ஆர்.எஸ். பாரதி எச்சரிக்கை!


தமிழகத்தில் பேனர்கள் வைக்கும் கலாச்சாரம் நீண்ட காலமாக அரசியல் கட்சிகளிடையே இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது சில பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த சூழலில் 2019ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் தவறி விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இதையடுத்து பேனர்கள் வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுகவினரே இப்படி செய்யலாமா?

இதனை அமல்படுத்த தொடக்கத்தில் உள்ளாட்சி துறை மிகவும் தீவிரம் காட்டியது. ஆனால் காலப்போக்கில் நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டது. தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக சார்பிலும் சிலர் பேனர்கள் வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் திமுக மாநிலங்களவை எம்.பியும், கழக அமைப்புச் செயலாளருமான

ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உடனே முற்றுப்புள்ளி வைக்கணும்

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்னும் கூட ஆங்காங்கே கழகத்தினரும், கழக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் சென்ற அதிமுக ஆட்சியில்

மீறினால் கடும் நடவடிக்கை

கடைப்பிடிக்கப்பட்ட பேனர் கலாச்சாரத்தால் மரணங்களும், விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் “எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்க மாட்டோம்” என்று முதன் முதலில் உயர் நீதிமன்றத்தில் கழகத் தலைவர் தான் திமுக சார்பில் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார். இதனை கட்சியினர் அனைவரும் அறிவர். அதன்பிறகு கழகத்தினர் பெரும்பாலானோர் பேனர் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad