தொப்பை குறைய டிப்ஸ் | Thoppai Kuraiya Tips in Tamil
காலை உணவை கட்டாயம் சாப்பிடுங்கள்:
Stomach Weight Loss Tips in Tamil: 1 தொப்பையை குறைக்க விரும்புபவர்கள் கட்டாயம் காலை உணவை தவிர்க்க கூடாது. காலை உணவு என்பது நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றல் நாம் சாப்பிடும் காலை உணவில் இருந்து தான் கிடைக்கிறது. எனவே எழுந்த ஒரு மணி நேரத்தில் காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சி கொள்ளும். தொப்பையை குறைக்க வேண்டும் என்று காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் உங்களுக்கு தொப்பை தான் பெரிதாகி கொண்டே போகும். ஆகவே இந்த தவறை செய்யாதீர்கள்.
தொப்பை குறைய மீன் மாத்திரை:
Stomach Weight Loss Tips in Tamil: 2 தொப்பையை குறைக்க விரும்புவார்கள் மீன் மாத்திரைகளை சாப்பிடலாம். அதாவது மத்தி மற்றும் சால்மன் போன்ற மீன் எண்ணெய் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதன் மூலம் இவற்றில் இருக்கும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் வெளியேறினால் நமது உடலும் கச்சிதமாக காணப்படும்.
இரவு 8 மணிக்குள் சாப்பிட வேண்டும்:
Thoppai Kuraiya Tips in Tamil: 3 பொதுவாக நமது வீட்டு பெரியவர்கள் காலை உணவை இராஜாவை போலவும், மதிய உணவை இளவரன் போலவும். இரவு உணவை பிரச்சைக்காரனை போல சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் காலை மற்றும் மதிய உணவுகளில் மட்டுமே தான் கிடைக்கிறது. இது மட்டும் இல்லை நாம் இந்த சமயத்தில் தான் உடலுக்கு அதிக வேலைகளையும் கொடுப்போம். ஆகவே இந்த இரண்டு வேளையும் நாம் நன்றாக சத்துள்ள உணவுகளை சாப்பிடலாம். ஆனால் இரவில் நாம் குறைந்த அளவிலேயே சாப்பிட வேண்டும். அதுவும் இரவு 8 மணிக்குள் சாப்பிடுவது எளிதில் ஜீர்ணகிக்க உதவுகிறது. மேலும் தேவையற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை இரவில் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்து கொள்ளவும்.
நார்ச்சத்து உணவுகள்:
Thoppai Kuraiya Tips in Tamil: 4 குறிப்பாக நார்ச்சத்து உணவுகள் நாம் சாப்பிடும் உணவுகளை எளிதில் செரிக்க உதவுகிறது. ஆகவே நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உங்களுடைய அன்றாட காலை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தானியங்கள், ஓட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்துள்ள உணவுகள் செரிமானம் அடைவதற்கு சற்று அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். அது உங்களுக்கு தேவையில்லாமல் பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். அதனால் அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.
தொப்பை குறைய சீரகம்:
Thoppai Kuraiya Tips in Tamil: 5 அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அவற்றில் 2 டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் இடித்த இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். கலவை நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். பின் ஒரு எலுமிச்சை பழத்தை சிறுசிறுத் துண்டாக கட் செய்து கொதிக்க வைத்த நீரில் சேர்த்து சிறிது நேரம் மூடிவைக்கவும். பின் சிறிது நேரம் கழித்து வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து மிதமான சூட்டில் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து அருந்தி வர தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
No comments:
Post a Comment