"பப்ஜி" விளையாடி ரூ.10 லட்சத்தை இழந்த சிறுவன் - வீட்டை விட்டு தப்பி ஓட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

"பப்ஜி" விளையாடி ரூ.10 லட்சத்தை இழந்த சிறுவன் - வீட்டை விட்டு தப்பி ஓட்டம்!

"பப்ஜி" விளையாடி ரூ.10 லட்சத்தை இழந்த சிறுவன் - வீட்டை விட்டு தப்பி ஓட்டம்!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுவன், "பப்ஜி" மொபைல் கேம் விளையாடி, தனது தாயின் வங்கிக் கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் "பப்ஜி" மொபைல் கேம் தடை செய்யப்பட்டாலும் கூட பலரும் இணையத்தில் சில வழிகளைக் கண்டுபிடித்து அந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர். விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, பணம் கொடுத்து பல சிறப்பம்சங்களை சிறுவர்கள் வாங்கி வரும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. "பப்ஜி" விளையாட்டில் ராயல் பாஸ், புது ஆடைகள், வண்ண துப்பாக்கிகள் போன்றவற்றை வாங்குவதற்காக, சிறுவர்கள் பெற்றோர்களுக்குத் தெரியாமல் பணம் செலவிட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஷ்வரி என்ற பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுவன், "பப்ஜி" விளையாட்டில், 10 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கடந்த சில மாதங்களாக "பப்ஜி" விளையாட்டுக்கு அடிமையாக இருந்த அச்சிறுவன், "பப்ஜி" விளையாட்டில் அடையாள அட்டை பெறுவதற்கும், விர்ச்சுவல் கரண்சி பெறுவதற்காகவும், தனது தாயாரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி 10 லட்சம் ரூபாய் செலவு செய்து இழந்துள்ளான்.

இந்த விவகாரம், அவனது பெற்றோருக்கு தெரிந்தவுடன் அவனை கடுமையாக திட்டியுள்ளனர். இதனால், கோபித்துக் கொண்ட சிறுவன் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டான். அதனையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் சிறுவனைக் கண்டுபிடித்து அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாட்டு நிறுவனங்கள் இது போன்ற சிறப்பம்சங்களை விற்பனை செய்து வருகின்றன. உதாரணத்திற்கு, ஒரு சிறுவன் காசு கொடுத்து வாங்கி விட்டால், அவன், தனது நண்பர்களுக்கு அதைப் பற்றி கூறி பெருமைக் கொள்கிறான். உடனே, தாங்களும் அதை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவர்கள் பலர் வீட்டிற்கு தெரியாமல் பணம் செலவழித்து வருகின்றனர்.

இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்களை, பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். விளையாடி முடித்த பிறகு, மொபைல் போனை சரிபார்க்க வேண்டும். இது போன்ற கண்டிப்பான நடைமுறைகளை பெற்றோர்கள் பின்பற்றினால், தவறுகள் குறைய வாய்ப்புள்ளது. இந்தப் போக்கு மாற வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

No comments:

Post a Comment

Post Top Ad