தொட்டாலே உதிரும் புளியந்தோப்பு கட்டடத்தின் ஒரு வீடு 15 லட்சம்: கட்டியவர் யார்? கமல் கேள்வி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

தொட்டாலே உதிரும் புளியந்தோப்பு கட்டடத்தின் ஒரு வீடு 15 லட்சம்: கட்டியவர் யார்? கமல் கேள்வி

தொட்டாலே உதிரும் புளியந்தோப்பு கட்டடத்தின் ஒரு வீடு 15 லட்சம்: கட்டியவர் யார்? கமல் கேள்வி

வடசென்னையின் கூவ நதிக்கரையிலும், சாலையோரங்களிலும் வசித்த மக்களுக்காக சென்னை புளியந்தோப்பில் உள்ள கேசவப்பிள்ளை பூங்காவில் 1980-ல் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் 1,536 வீடுகளைக் கட்டியது.
இந்த கட்டிடம் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டதால் இடிக்கப்பட்டு இரு கட்டடங்களாக கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி 2008 இல் முதற்கட்டமாக 672 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. எஞ்சிய குடும்பங்களுக்கு 946 வீடுகள் கொண்ட 9 அடுக்கில் குடியிருப்பு கட்டப்பட்டு பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டன.

ஆனால், வீடுகள் கிடைத்தாலும் கட்டடத்தின் சுற்றுப்புற சுவற்றை அழுத்தினாலே சிமெண்ட் உதிர்ந்து விழுவதால் அங்கு வசிக்கமுடியாதபடி மக்கள் பீதியில் உள்ளனர். தரமற்ற அளவில் கட்டடத்தை கட்டியுள்ளனர் என்று குடிசை மாற்று வாரியத்தின் மீது தற்போது புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்

கமல்ஹாசன் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். கமல் ட்வீட்டில், '' புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு.

இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும்'' என இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad