தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பில் சிக்கல்: ஜகா வாங்கும் அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பில் சிக்கல்: ஜகா வாங்கும் அரசு!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பில் சிக்கல்: ஜகா வாங்கும் அரசு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தேசித்துள்ளதாக தெரிவித்தது.

இதையடுத்து, பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆயத்தமாகி வருகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆசியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. மேலும், அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க இயலாத சூழல் நிலவுதால் பாடத்திட்டங்களை 50 சதவீதம் வரை குறைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பள்ளிகளை திறந்த வேறு சில மாநிலங்களில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் குறிப்பிட்ட சில பள்ளிகள் மூடப்பட்டன. எனவே, மாணவர்களின் நலன் கருதி இந்த விஷயத்தில் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். அதில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிவு செய்யப்படும் எனவும், பள்ளிகள் திறப்பு குறித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சின் மூலம் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் வகுப்பில் உள்ள சிக்கல், மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டிய அவசியம் குறித்து முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் ஒருமித்த கருத்தாக வலியுறுத்தினாலும், தொற்று காலத்தில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கும் முடிவை முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad