நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? திமுக வேட்பாளர் வழக்கு!
அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் வெற்றியை உடனடியாக ரத்து செய்து இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை
மே 2ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதிமுக பிரதான எதிர்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11,932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து
திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும், வாக்குப்பதிவுக்கு முன் கடைசி 48 மணி நேரம், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
No comments:
Post a Comment