திருவள்ளூர் நீதிமன்றத்தில் பெண் சுருக்கெழுத்தர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!
திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர் பெண் சுருக்கெழுத்தர் சரஸ்வதி. இவர் இன்று தட்டச்சு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடித்துள்ளார்.
அப்போது நீதிமன்ற உதவியாளர்கள் சரஸ்வதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக சரஸ்வதியின்
குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சரஸ்வதிக்கு எதனால் மாரடைப்பு ஏற்பட்டது? அவருடைய மருத்துவ விவரங்களை குறித்து மருத்துவமனையில் ஆராந்து வருகின்றனர்.
நீதிமன்ற பெண் பணியாளர்
பணியில் இருந்த போதே இறந்த சம்பவம் நீதிமன்ற வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment