அடியாளா வந்தவன் அர்ச்சகர் ஆயிட்டான், அவ்வளவு பேரும் பம்முறான் இப்போ..! கரு பழனியப்பன் பொளேர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

அடியாளா வந்தவன் அர்ச்சகர் ஆயிட்டான், அவ்வளவு பேரும் பம்முறான் இப்போ..! கரு பழனியப்பன் பொளேர்

அடியாளா வந்தவன் அர்ச்சகர் ஆயிட்டான், அவ்வளவு பேரும் பம்முறான் இப்போ..! கரு பழனியப்பன் பொளேர்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தால் பாஜகவினர் மகிழ்ச்சி அடையவில்லை என்றும் அதற்கான காரணத்தையும் திமுகவைச் சேர்ந்த கரு பழனியப்பன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல்.
திருமாவளவன் தனது 59 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பொது கூட்டம் ஒன்றை இரவு 12 மணி வரையில் நடத்தினர். இந்த கூட்டத்தில் கட்சி எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.

அப்போது பேசிய கரு பழனியப்பன் திருமாவளவனின் அரசியல் கொள்கை, டாக்டர் அம்பேத்கரை அணுகும் முறை ஆகியவற்றை குறித்து பெருமையாக பேசியதுடன் திருமாவாவனை பற்றிய அனுபவங்களை பகிர்ந்தார். தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகியுள்ளதை பாஜக ஏன் கொண்டாடவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது, ''தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகியாச்சு, சட்டமும் வந்தாச்சு, பணி நியமனமும் வழங்கியாச்சு.

எச். ராஜா இதனை வரவேற்று இருக்கனும் அல்லவா? எச். ராஜாதான் இந்துக்களே ஒன்று கூடுங்க, ஒன்று கூடுங்க என்று சண்டை போட கூப்பிட்டாரு. இப்போ இந்துக்கள் அனைத்து சாதியில் இருந்தும் அர்ச்சகர் ஆயிட்டாங்க. இதை நீங்கள் பாராட்டி இருக்கணுமா இல்லாயா? ஆனா ஒருத்தன் கூட பாராட்ட மாட்டேங்கிறான், பம்முறான்.

ஏன்னா இவன்லாம் இந்துக்களை அடியாளா கூப்பிட்டவன். நான் மேல இருக்கேன், நீங்கலாம் அடியாளா இருங்கடான்னு கூப்பிட்டு இருக்கான். ஆனா, நான் அர்ச்சகரா வரேன் என்று சொன்னால் விட மாட்டேங்கிறான். இதுதான் பெரியார் கண்ட கனவு. வீரமணி, கலைஞர், திருமாவளவன் கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கைப்படி சாதி ஒழிப்பு என்ற முதல் படியில் ஒரு படி ஏறியுள்ளோம். அடுத்து பெண் ஒழிப்பு தான். முதல் பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளார் அடுத்து ஒரு பெண் அர்ச்சகராக நியமிக்கப்பட்டால் பெண் விடுதலையும் நிறைவேறிவிடும்'' என இவ்வாறு கரு பழனியப்பன் பேசினார்.



தமிழகத்தில் ஆகம விதிகளில் பயிற்சிபெற்ற தலித் மாணவர்கள் இருவர் உள்பட 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad