நைட் 1 மணிக்கு அமைச்சர்களுக்கு போன் போடும் ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 27, 2021

நைட் 1 மணிக்கு அமைச்சர்களுக்கு போன் போடும் ஸ்டாலின்!

நைட் 1 மணிக்கு அமைச்சர்களுக்கு போன் போடும் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்று பெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். அன்று முதல் முதல்வராக ஸ்டாலின் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கொரோனா தடுப்பு பணிகளில் அவர் காட்டிய தீவிரம், பொருளாதார ஆலோசனைக் குழு, மாநில திட்டக்குழு, முந்தைய ஆட்சி காலத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என அடுத்தடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம். 100 நாட்கள் நிறைவடைந்துள்ள ஸ்டாலின் தலைமையிலான பதவியேற்றதிலிருந்து நடக்கும் சில நிகழ்வுகள் தமிழ்நாடு புதிய அரசியல் கலாச்சாரத்தினை நோக்கிச் செல்கிறது என்னும் உணர்வைத் தோற்றுவிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

தன் மீதும், கட்சியின் மீதுமான விமர்சனங்களை ஸ்டாலின் உற்று நோக்கி அதற்கு உடனடியாக செயலாற்றி வருகிறார். கடந்த ஆட்சி காலத்தில் திமுக மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இந்த முறை வந்து விடக் கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருக்கிறார். திமுக அரசு அனைவருக்குமானதாக இருக்கும். தங்களுக்கு வாக்களிக்காதவர்களும் வருந்தும் வகையில், அரசின் செயல்பாடுகள் இருக்கும் என்றும் அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

அம்மா உணவகம் அதே பெயரில் செயல்பட அனுமதி, ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிந்தும் பள்ளி மாணவர்களுக்கான 65 லட்சம் புத்தக பைகளில் ஜெயலலிதா, ஈபிஎஸ் படங்களை முந்தைய அதிமுக அரசு அச்சடித்து விட்டது. 13 கோடி ரூபாயில் இதனை அழித்து விடலாம் என்று யோசனை கூறியபோதும், அதனை மாணவர்களின் நலன்களுக்காக பயன்படுத்துவேன். அவர்கள் படமே இருந்து விட்டு போகட்டும் என்று ஸ்டாலின் கூறியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதேசமயம், முதல்வராக பொறுப்பேறதில் இருந்தே அவர் ஓய்வின்றி பணியாற்றி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சரியாக மருந்து மாத்திரிகைகளை கூட அவர் எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இரவு 1, 3 மணிக்கெல்லாம் தமிழக முதல்வர் ஸ்டாலின் போன் போட்டு பேசுவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “மனம் விட்டு பேசுறேன். முதல்வர் ஸ்டாலின் எப்ப தூங்குறாருனே தெரியல. அமைச்சர்களுக்கும் கூட தெரியல. நைட் 1 மணிக்கு, 3 மணிக்குலாம் போன் வருகிறது. 24 மணி நேரமும் உழைக்கிறார்” என்றார். இதன் மூலம் ஓய்வின்றி ஸ்டாலின் ஆற்றி வரும் பணிகள் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad