ரூ.200 கோடியில் மாணவர்களுக்கு திட்டம்: நிதியமைச்சர் நச் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

ரூ.200 கோடியில் மாணவர்களுக்கு திட்டம்: நிதியமைச்சர் நச் அறிவிப்பு!

ரூ.200 கோடியில் மாணவர்களுக்கு திட்டம்: நிதியமைச்சர் நச் அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்று காலமென்பதால் மாணவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே கல்வி கற்று வருகின்றனர். வெகு சிலருக்கே கிடைக்கும் ஆன்லைன் கல்வி பலருக்கும் கிடைப்பதில்லை. பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லாமல் இருப்பதால், கற்றல் பாதிப்புகள், உளவியல் சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் பதிலுரையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “பெருந்தொற்றால் ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்புகள் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றைச் சரிசெய்திட மாபெரும் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் தமிழகமெங்கும் செயல்படுத்தப்படும்” என்றார்.

இதன் முழு விவரங்களைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பார் என்று தெரிவித்த அவர், “இதனுடைய அம்சம் என்னவென்றால், ஒன்றரை வருடம் இங்கே வகுப்புகள் நடக்காத சூழ்நிலையில், திடீரென்று மாணவர்களைப் பள்ளிகளுக்கு திருப்பி அழைத்து உடனடியாக அவர்களை வகுப்புகளில் சேர்த்தால், பலர் வரமாட்டார்கள். பலர் வந்தாலும் கற்றுக்கொள்ள முடியாது” என்று சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேலும் பேசுகையில், குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைத் தொழிலாளர்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். நிரந்தரமாக சில பேர் படிப்பை நிறுத்திவிட்டார்கள் என்ற சூழ்நிலை உருவாகியிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அதையெல்லாம் திருத்தும் வகையில் ஒரு மிகச் சிறந்த திட்டத்தை வெளியிடுவதாக தெரிவித்தார்.

அனைத்துப் பள்ளிக் கல்வி மாணவர்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் பள்ளி நேரத்துக்குப் பிறகு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக கற்பித்தல் வாசிப்பு இயக்கம் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கு, தற்போது இந்த நிதியாண்டின் முதல் ஒதுக்கீடாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அப்போது அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad