ஆப்கன் விவகாரம்: வரும் 24ல் ஐ.நா., மனித உரிமை கவுன்சில் ஆலோசனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

ஆப்கன் விவகாரம்: வரும் 24ல் ஐ.நா., மனித உரிமை கவுன்சில் ஆலோசனை!

ஆப்கன் விவகாரம்: வரும் 24ல் ஐ.நா., மனித உரிமை கவுன்சில் ஆலோசனை!

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக வரும் 24ம் தேதி ஐ.நா., மனித உரிமை அவசரக் கூட்டம் நடைபெறுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்த நிலையில், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால், உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்தன. மேலும்,ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்கள் மீது தாலிபன் ஆட்சியின் தாக்கம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க வரும் ஆகஸ்ட் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில், "ஆப்கானிஸ்தானில் தீவிர மனித உரிமைகள் கவலைகள் மற்றும் சூழ்நிலைகள்" என்ற தலைப்பில் சிறப்பு அமர்வை நடத்துகிறது.

பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து உட்பட 60 நாடுகளின் ஆதரவுடன் இந்த அமர்வு கூட்டப்படுகிறது. இதில் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் காணொலி வாயிலாக உரையாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad