வரும் செப்டம்பர் 25ஆம் தேதி ஒட்டுமொத்தமா முடங்கப் போகும் இந்தியா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

வரும் செப்டம்பர் 25ஆம் தேதி ஒட்டுமொத்தமா முடங்கப் போகும் இந்தியா!

வரும் செப்டம்பர் 25ஆம் தேதி ஒட்டுமொத்தமா முடங்கப் போகும் இந்தியா!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய போராட்டம் பலத்த மழை, கடும் பனி, வெயில் ஆகியவற்றுக்கு இடையில் 10 மாதங்களைத் தொட்டுள்ளது. ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முன்வரவில்லை. இதற்கிடையில் மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில் ’பாரத் பந்த்’ என்ற பெயரில் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) என்ற விவசாயிகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியின் சிங்குவா எல்லைப் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த
ஆசிஷ் மிட்டல், வரும் செப்டம்பர் 25ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகுங்கள்.
முழு ஆதரவு

கடந்த ஆண்டும் இதேநாளில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு அளித்த முழு ஆதரவை அனைத்து தரப்பினரும் அடுத்து வரும் போராட்டத்திலும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விவசாயிகளின் கோரிக்கை என்பது மூன்று வேளாண் சட்டங்களை மறுபரிசீலனை செய்வது, அனைத்து பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வது,

விவசாயிகள் கோரிக்கை

மின்சார திருத்த மசோதாவை மறு ஆய்விற்கு உட்படுத்துவது உள்ளிட்டவை என்று மிட்டல் தெரிவித்தார். நேற்றைய தினம் விவசாயிகளின் அனைத்திந்திய மாநாடு நடைபெற்றது. அதில் 22 மாநிலங்களைச் சேர்ந்த 300 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி பெண்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர், இளைஞர்கள், மாணவர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்தும், வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள், மத்திய அரசின் கார்ப்பரேட் நிலைப்பாடு, அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad