மாநில அரசுகள் இதை விட்றாதீங்க; மத்திய அரசு அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

மாநில அரசுகள் இதை விட்றாதீங்க; மத்திய அரசு அதிரடி உத்தரவு!

மாநில அரசுகள் இதை விட்றாதீங்க; மத்திய அரசு அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் மூன்றாவது அலை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் கொரோனா தடுப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஏற்கனவே அமல்படுத்திய கோவிட்-19 வழிகாட்டுதல்கள் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடிதம்

இதுதொடர்பாக அனைத்து மாநில/ யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில், தேசிய அளவில் கொரோனா தொற்று ஒரு நிலையான இடத்திற்கு வந்துள்ளது. சில மாநிலங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் சமூகப் பரவலாக காணப்படுகிறது. அதேசமயம் சில மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும்,

என்னென்ன செய்ய வேண்டும்?

பாசிடிவ் விகிதமும் மிகவும் பிரச்சினைக்குரிய வகையில் உள்ளன. இங்கு நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரவுள்ளதால் அதிகப்படியான கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவை ஏற்பட்டால் கொரோனா பரவலை தடுக்க உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

மாநில அரசுகளின் கடமை

நோய்த்தொற்று அதிகரிப்பதை முன்கூட்டியே உணர்ந்து உரிய முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கூட்ட நெரிசல் நிறைந்த அனைத்து இடங்களிலும் கோவிட் ஒழுங்கு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டும். பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி என்ற 5 வழி செயல்முறையில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
நோய்த்தொற்று குறைவாக உள்ள பகுதிகள் அல்லது கொரோனா முற்றிலும் இல்லாத பகுதிகளில் தொடர்ச்சியான பரிசோதனைகள், கண்காணிப்பின் மூலம் மீண்டும் வைரஸ் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad