குட்கா மென்ற மணமகனுக்கு மணமகள் "பளார்!" - வீடியோ உள்ளே! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

குட்கா மென்ற மணமகனுக்கு மணமகள் "பளார்!" - வீடியோ உள்ளே!

குட்கா மென்ற மணமகனுக்கு மணமகள் "பளார்!" - வீடியோ உள்ளே!

டெல்லியில், திருமணச் சடங்கின் போது, குட்கா புகையிலைப் பொருளை வாயில் மென்றுக் கொண்டிருந்த மணமகனை, மணமகள் கன்னத்தில் அறைந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலைநகர் டெல்லியில், திருமணம் ஒன்று நடைபெற்றது. திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மணமகள் - மணமகள் அருகிலிருந்த நபர் ஒருவர், குட்கா புகையிலை பொருளை வாயில் வைத்து மென்றுக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகள், அந்த நபரை ஓங்கி பளார் என கன்னத்தில் அறைந்தார்.

அப்போது அடி வாங்கிய நபர், மணமகனும் வாயில் குட்கா புகையிலை பொருளை வைத்துள்ளதாக மாட்டி விட்டுள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற மணமகள், அருகே இருந்த மணமகனை கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.பிறகு, குட்கா புகையிலைப் பொருளை கீழே துப்பும்படி சொன்னார். கன்னத்தில் அடி வாங்கிய மணமகன், எழுந்து சென்று குட்காவை கீழே துப்பி விட்டு வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிதல் வைரலாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad