வாயில என்ன? மாப்பிள்ளைக்கு பளார் விட்ட மணமகள்..!
வட மாநிலங்களில் நடக்கும் பல திருமண நிகழ்ச்சிகளில் சுவாரசிய சம்பவங்கள் இணையத்தில் வைரலாகிவிடும். அந்த வகையில், டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமகளால், மாப்பிள்ளை
அடி வாங்கிய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றுக்கொண்டிருக்க மணமகன், மணமகள் அருகருகே அமர்ந்தபடி இருந்தனர். அப்போது, மணமகன் சாவகாசமாக வாயில் குட்காவை போட்டுகொண்டு சுவைத்து கொண்டிருந்தார்.
அதனை கண்ட மணமகள் உறவினர் ஒருவரை பளார் விட்டதுமட்டுமின்றி மணமகனையும் அடித்து, குட்காவை துப்பிட்டு வந்து உட்கார கூறியுள்ளார். வருங்கால
மனைவியிடம் அடி வாங்கிய அதிர்ச்சியில் இருந்த மணமகனோ, உடனே குட்காவை துப்பிவிட்டு வந்து மீண்டும் மணமகள் அருகே அமர்ந்தார்.
இந்த நிகழ்வை வீடியோ எடுத்தவர்கள் அதனை வலைதளத்தில் பகிர்ந்து வைரல் ஆகியுள்ளனர். வட மாநிலங்களில் குட்கா பழக்கம் அதிகம் இருப்பது அனைவருக்கு தெரிந்ததுதான்.
ஆனால், திருமண நிகழ்ச்சியில்கூட மணமகன் வாயில் குட்கா வைத்திருந்த சம்பவம் மணமகளை மட்டுமின்றி நெட்டிசன்களையும் கடுப்பாக்கியுள்ளது
No comments:
Post a Comment